Home /News /tamil-nadu /

கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகர் போலீசில் ஒப்படைப்பு

கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகர் போலீசில் ஒப்படைப்பு

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

Rajendra balaji | கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் விருதுநகர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தது. அதனையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது முன் ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனையடுத்து, ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அவர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரின் செல்போன் தொடர்பு எங்கள் வைத்து தொடர்ந்து கண்காணித்த போலீசார் அவரை 8 தனிப்படை போலீசார் கொண்டு தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் நடுரோட்டில் வைத்து கைது செய்தனர்.

    அவரோடு சேர்ந்து பாஜகவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டப் பொதுச்செயலாளர் ஓசூர் சானமாவு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், அவரது உதவியாளர் நாகேஷ், கிருஷ்ணகிரி பாஜக நகர செயலாளர் ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் பாண்டியராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.

    கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜி கைது..



     கர்நாடகா பகுதியில் கைது செய்யப்பட்ட அனைவரையும் அங்கிருந்து அழைத்து வந்த தனிப்படை போலீசார் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி முன்புறம் சாலையில் வைத்து வாகனத்தில் இருந்து இறக்கி துப்பாக்கி ஏந்திய வாகனத்தில் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு விருதுநகர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்பு விருதுநகர் மாவட்ட போலீசார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றனர். தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட ஐவரும், விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து அழைத்துச் செல்லப்பட்டனர்.


    செய்தியாளர்: செல்வா, ஓசூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Rajendra balaji

    அடுத்த செய்தி