வயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தி.மு.க கட்சி அழிந்து வருவதாகவும், அதில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்க ஆள் இல்லை எனவும் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அ.தி.மு.கவில் வயதானவர்கள் சீட் கேட்காதீர்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மல்லியில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, பிரிந்து போனவர்கள் தற்போது அதிமுக இணைந்துள்ளார்கள் எனவும், அண்ணன் தம்பிகளுக்கிடையே உண்டான சண்டை மட்டுமே நடந்தது. அதிமுக வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. சண்டை இருக்கத்தான் செய்யும். இனி அ.தி.மு.க மட்டுமே ஆளனும் என தெரிவித்தார்.

மேலும் வசதி வாய்ப்பு இல்லாத வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது எனவும், இது கம்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களைத் தேர்வு செய்து சீட்டு கொடுங்கள் எனவும் பேசினார். தி.மு.க கட்சி அழிந்து வருவதாகவும், அதில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்க ஆள் இல்லை எனவும் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் நமக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சங்கை நசுக்கி பிடித்தோம் விட்டா போதும் என 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தி.மு.க வேட்பாளர் ஜெயித்து விட்டார். சங்கை இறுக்கி பிடித்தால் சோலி முடிஞ்சிருக்கும் அ.தி.மு.க ஜெயித்திருக்கும் என பேசினார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மத பிரச்சனையை தூண்டி விட்டு தி.மு.க ஜெயித்தார்கள் எனவும், தற்போது இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அ.தி.மு.க பக்கம் உள்ளனர். அவர்கள் அ.தி.மு.கவிற்கு தான் வாக்களிப்பார்கள் என அமைச்சர் பேசினார்.

Also see:


 
Published by:Karthick S
First published: