தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்

தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்

ராஜீவ் ரஞ்சன்

1985ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர் ராஜீவ் ரஞ்சன்.

  • Share this:
தமிழக தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன். அவர், தனது இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினார்.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகம். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று 1985ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். பயிற்சி சப் கலெக்டராக தஞ்சையில் பணியாற்றிய அவர், நெல்லை சேரன்மாதேவி சப் கலெக்டராகவும் பணியாற்றினார். கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின் தலைமைச் செயலராக பதவியேற்றார். இந்நிலையில், அவரின் பதவிக்காலம் 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலமான அப்போது, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அவரின் பதவி ஓய்வு காலத்தை மத்திய அரசு இரண்டு முறை நீட்டித்தது. இந்தநிலையில், நேற்றுடன் அவரின் பதவி நீட்டிப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை மத்திய அரசு நியமித்தது.

அவர், மத்திய அரசின் மீன்வளத்துறையின் செயலாளராக இருந்தார். அவரை சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு அந்தப் பணியில் இருந்து விடுவித்தது.

மேலும் படிக்க....  தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக தலைமை பரிசீலிக்கும் - கே.பி. முனுசாமி

இதனைத் தொடர்ந்து, ராஜீவ் ரஞ்சன் 47ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர், 1985ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். இந்நிலையில், அவர் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது இருக்கையில் அமர்ந்து தனது பணியைத் தொடங்கினார்.
Published by:Suresh V
First published: