அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம்

ஓபிஎஸ்- இபிஎஸ்

ராஜேந்திர பாலாஜியால்தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை என ராஜவர்மன் குற்றச்சாட்டு.

 • Share this:
  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படாததால்,  டிடிவி திகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். இந்நிலையில், ராஜவர்மனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளள் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு M.S.R. ராஜவர்மன் M.L.A. (சாத்தூர் சட்டமன்ற தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், “சாத்தூர் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் இன்று அமமுகவில் இணைந்துள்ளோம். உழைப்பவர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை என்பதே வருத்தமாக உள்ளது. தொகுதியில் இருக்கும் 1 லட்சம் நபர்களை கூட விசாரிக்கலாம்.

  ராஜேந்திர பாலாஜியால்தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை. ராஜேந்திர பாலாஜிக்காக கட்சியா அல்லது கட்சிக்கு ராஜேந்திரபாலாஜியா?. மீண்டும் தற்போது இருக்கும் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவாரா? முதல்வர், துணை முதல்வரை ஏமாற்றி வருகிறார் ராஜேந்திரபாலாஜி.

  Must Read : அமமுகவில் இணைந்தார் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்  வெற்றி வாய்ப்பிருக்கும் யாருக்கும் அதிமுகவில் வாய்ப்பு வழங்கவில்லை. தேர்தலுக்கு பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்யும் இடத்தில் இருப்பார். இரண்டாண்டு காலமாக நான் ஆற்றிய பணிகள் என் தொகுதி மக்களுக்கு தெரியும். மக்களின் ஆதரவோடு, நிர்வாகிகள் வேண்டுதலோடுதான் அமமுகவில் இணைந்துள்ளோம்.” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: