பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜகோபாலன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

கைதான ராஜகோபாலன்

ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை zoom செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Share this:
ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து உள்ளதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி பெற்றனர். இதில் ராஜகோபாலனிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர் இராஜகோபாலன் இடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 250 கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா? மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்? அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு ஏன் நடத்தினீர்கள்? மாணவிகளுக்கு சினிமா ஆசை காட்டி என்னமாதிரியான மோசடிகளில் ஈடுபட்டீர்கள்? எந்தெந்த ஆசிரியருடன் சேர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தீர்கள்? போலீசார் சரமாரி கேள்விகள் கேட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது .இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை zoom செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு நாட்கள் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் ராஜகோபாலுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Also Read:   இரவு உணவிற்கு சாலட் தராததால் மனைவியை கொன்ற கொடூரன்.. உத்தரபிரதேசத்தில் சோகம்!

தொடர்ந்து நாளை மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read:   டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு காலை 11 மணி அளவில் ஆசிரியர் ராஜகோபாலன், பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது
Published by:Arun
First published: