சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை விடாமல் பெய்துவரும் நிலையில், மழைக் காலங்களில் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன அறிந்துகொள்வது அவசியம்.
அவசியமற்று மழை நீரில் நடப்பது, விளையாடுவது ஆகியவை பாக்டீரியா, வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலை ஏற்படுத்திவிடும். எனவே, அதனை தவிர்க்க வேண்டும். பருவமழைக் காலத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்படுமென்பதால், குடை அல்லது rain coat எடுத்துச் செல்வது நல்லது. வெள்ளம் தேங்கி இருக்கும் பகுதிக்குச் செல்லாமல் தவிர்ப்பது நல்லது.
அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகளை எக்காரணம் கொண்டும் தொடக் கூடாது. உடனடியான 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம். மின்மாற்றிகளுக்கு அருகில் செல்வது, அதனருகில் வாகனங்களை நிறுத்திவைப்பதையும் தவிர்க்க வேண்டும். மழை நீரில் ஊறிய சுவற்றில் உள்ள ஸ்விட்ச் போர்டுகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மொட்டை மாடிகள், வீட்டு சுற்றுபுறத்தில் மழை நீர் தேங்கும்படியான அவசியமற்ற பொருட்களை அப்புறப்படுப்படுத்துவது, டெங்கு, மலேரியா கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும்.
கனமழை பெய்யும் சமயங்களில் மின்சாதன பொருட்களின் மின் இணைப்பை துண்டித்து வைத்தல் நல்லது. ஜன்னல்களை தாழிட்டு வைப்பது மழை நீர் வீடுகளுக்குள் புகுவதைத் தடுக்கும். மேலும், இடி மின்னல் சமயங்களில் பாதுகாப்பாக இருக்கும். பருவமழைக் காலங்களில் அவசரகால உபகரணங்களை தயாராக வைத்துக் கொள்ளுதல் உதவிகரமாக இருக்கும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சென்றவர்கள் மூன்று நாள் கழித்து சென்னைக்கு வாங்க... முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
குறிப்பாக வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருப்பவர்கள், மருந்துகள், எம்ர்ஜென்சி லைட், குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக் கொள்ளலாம். வீட்டை சுற்றி காய்ந்துபோன மரங்கள், மரக்கிளைகளை அகற்றுதல் அவசியம். சார்ஜில் போட்டுக்கொண்டே கைபேசியை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். உயரமான மரங்கள், மைதானங்களில் தனியாக இருக்கும் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்த்தல் இடி தாக்கத்திலிருந்து தப்ப வைக்கும்.
மேலும் படிங்க: சென்னை மழை, வெள்ளம்: உதவி எண்கள் அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.