விடிய விடிய கனமழை: கோவையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

விடிய விடிய கனமழை: கோவையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மழைநீர்

புலியகுளம் மசால் லே அவுட் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் சாக்கடையுடன் கலந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

 • Share this:
  கோவையில் இரவு பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

  இந்நிலையில், கோவையில் விடிய விடிய மழை பெய்து வருகின்றது. இதனால், சிங்காநல்லூர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள வீடுகளில் தரைத்தளத்தில் இருந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

  மேலும் படிக்க...வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்: காவல்துறையினர் துப்பாக்கி சூடு

  இதேபோல, சிவானந்தா காலனி சாஸ்த்ரி ரோடு , புலியகுளம் மசால் லே அவுட் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் சாக்கடையுடன் கலந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

  இந்நிலையில், கணபதி அண்ணா நகர் பகுதியில் உள்ள சிக்னல், காற்று மற்றும் மழை காரணமாக இரவு நேரத்தில் சரிந்து விழுந்தது. அத்துடன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் மழை காரணமாக மரம் சாய்ந்து விழுந்த்ததால், மின்தடை ஏற்பட்டது. இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: