Home /News /tamil-nadu /

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக    மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வானிலை தகவல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    சென்னையை பொறுத்தவரை:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக    மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    Read More: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  கோவில்பட்டி (தூத்துக்குடி), உதகமண்டலம் (நீலகிரி) தலா 5 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Rain updates, Weather News in Tamil

    அடுத்த செய்தி