மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் ‘புல் எஃபெக்ட்’ காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 11 மணி வாக்கில் புயல் கரையை கடக்கும் போது கனமழையுடன் சூரைகாற்றும் வீசியது. சென்னையை புரட்டிப்போட்ட இந்த புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட வெதர்மேன் பிரதீப் ஜான், “மாண்டஸ் புயல் அதீத காற்று மற்றும் மழையை கொண்டதாக இருந்தது. இருப்பினும் பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல் கரையை கடந்துள்ளது. நகர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70-75 கி.மீ ஆக இருந்தது. நாளை முதல் ‘புல் எஃபெக்ட்’ காரணமாக மழை பெய்யும்.
Mandu (Mandous) - Rain filled and windy one which was enjoyable as it did not cause any major damage. Pull effect rains from tomorrow.
Mandu crossed the coast without any major destruction and recorded wind speeds in City was 70-75 km/hr
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 10, 2022
மாமல்லபுரம், கேளம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ வேகத்தை எட்டியிருக்க கூடும். இழுப்பு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும். அரபிக்கடல் சென்ற பிறகு காற்று வீசக்கூடும். நல்ல நாட்கள் காத்திருக்கிறது” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.