வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

 • Share this:
  தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோரம் மற்றும் வட மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்ளில் இடியுடன் கூடிய கன மழையும்,உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 27-ம் தேதி வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

   

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: