சென்னை: காலையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை..

(கோப்புப்படம்)

சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் லேசான மழை பெய்த நிலையில், காலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

 • Share this:
  சென்னையில் பல பகுதிகளில் இன்று காலை அரை மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் பலத்த மழை பெய்தது இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது.

  இந்த நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரல் மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, தி நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது .

  US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?

  மேலும் சென்னையில் கிண்டி, மத்திய கைலாஷ், அடையாறு, சின்ன மலை, பெசன்ட் நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் லேசான மழை பெய்துள்ளது. அதே போல சூளைமேடு, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், ராயபேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

  மேலும் காலை நேரத்திலும் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதே நேரத்தில் போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சில இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

  மேலும் படிக்க: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - தமிழக அரசு தீவிர ஆலோசனை

  US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..  வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது அடுத்த இரண்டு மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

   
  Published by:Vaijayanthi S
  First published: