ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்களே உஷார்... 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் வெளுக்கப்போகும் மழை! - எங்கெல்லாம் தெரியுமா?

மக்களே உஷார்... 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் வெளுக்கப்போகும் மழை! - எங்கெல்லாம் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Weather updates | தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தின் மதுரை தேனி, திண்டுக்கல்கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கிழக்கு தாம்பரம் லட்சுமிநகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தாம்பரம் அருகே இரும்புலியூர் ஏரியில் இருந்து வெளியேறிய மழைநீர், கிழக்கு தாம்பரம் லட்சுமிநகரில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

பல்லாவரம் அருகே முருகன் நந்தவனம் பகுதியில், நன்மங்கலம் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர், குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகினர். நீரை தடுக்கும் விதமாக, மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிக தடுப்பணை அமைத்துள்ளனர்.

Also see... தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட13 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் அலெர்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், காவேரிப்பட்டினம், ஆலப்பட்டி, குந்தாரப்பள்ளிஉள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் தவுத்தாய் குளம், தாமரைக்குளம், கீழப்பழுவூர், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை

இந்நிலையில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Heavy Rains, Meteorology department, Weather News in Tamil