Home /News /tamil-nadu /

தென் மாவட்டங்கள் மட்டுமல்ல இங்கும் இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

தென் மாவட்டங்கள் மட்டுமல்ல இங்கும் இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

TN Rain Forecast : வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் படிக்கவும் ...
    தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று (மார்ச் 25-2022) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    நாளை (26ஆம் தேதி) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும், ஞாயிற்றுக் கிழமை (27ஆம் தேதி) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதேபோல, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    Must Read : காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சின்கோனா (கோயம்புத்தூர்) 3, அரிமளம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாறு (கோவை), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை (கோவை) தலா 2, ஆழியாறு (கோவை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), அமராவதி அணை (திருப்பூர்), கொடவாசல் (திருவாரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 1 என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வுமையம்
    மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Meteorological Center, Rain, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி