• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

Tamil Nadu Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • Share this:
    தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 06.09.2021 :  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    07.09.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    08.09.2021:கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    09.09.2021, 10.09.2021:  தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    Also Read : அதிகரிக்கும் ஒரு நபர் ரேஷன் கார்டு - அரசின் நிலைபாடு என்ன?

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
    சின்னக்கல்லார் (கோவை), செந்துறை (அரியலூர்) தலா 7, மஹாபலிபுரம் (செங்கல்பட்டு) 6, சேலம், சேந்தமங்கலம் (நாமக்கல்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 5, ஈரோடு , புவனகிரி (கடலூர்), வால்பாறை (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மரக்காணம் (விழுப்புரம்) தலா 4, ஜெயம்கொண்டம் (அரியலூர்), தரமணி (சென்னை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சீர்காழி (மயிலாடுதுறை), தேவலா (நீலகிரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி), நாமக்கல் தலா 3,

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக

    வங்ககடல் பகுதிகள்
    06.09.2021: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அரபிக்கடல் பகுதிகள்:
    06.09.2021, 07.09.2021: கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    06.09.2021 முதல் 10.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: