ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிலுசிலு சென்னை.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்!

சிலுசிலு சென்னை.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்!

மாதிரி படம்

மாதிரி படம்

TN Rains: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் நோக்கி வந்த நிலையில், படிப்படியாக வலு குறைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக,

    23.11.2022 மற்றும் 24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்த நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்தது.

    வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் நோக்கி வந்த நிலையில், படிப்படியாக வலு குறைந்தது. நேற்றிரவு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. எனினும், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதன்படி, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Weather News in Tamil