Cyclone Nivar | நிவர் புயலால் திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த மழை.. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் தவிக்கும் மக்கள்...

திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த மழை- வீடுகளில் புகுந்த தண்ணீர்

நிவர் புயல் எதிரொலியாக திருவண்ணாமலையில் அதிகாலை முதல் பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக திருவண்ணாமலை வேல் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

  • Share this:
நிவர் புயலால் இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பகுதியில் வேல் நகர், அருணகிரிபுரம், கோபி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதே  பகுதியில் உள்ள குளம் நிரம்பியதால் குளத்திலிருந்து வெளியேறி உபரிநீர் இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. அதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.



வீடுகளில் முட்டிக்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் உணவு சமைத்து கூட சாப்பிட முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். வீடுகளில் உள்ள டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும் மழைநீரால் சேதமடைந்தது.

மேலும் படிக்க...ட்விட்டரில் மீண்டும் வரும் வசதி என்னன்னு தெரியுமா? மக்கள் கருத்தைக் கேட்கும் ட்விட்டர்..







இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் வெள்ள நீரை வெளியேற்ற இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published: