RAIN LIVE UPDATES: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை

  • News18 Tamil
  • | December 02, 2019, 08:55 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    11:44 (IST)

    தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

    9:28 (IST)
    9:14 (IST)
    8:0 (IST)

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக 4 வீடுகளின் சுவர்கள் அதிகாலை இடிந்துள்ளன. இதனால், வீட்டில் தூங்கிகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    7:54 (IST)

    கோவை மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    7:48 (IST)

    புதுக்கோட்டையில் கனமழை - அறந்தாங்கி கல்விமாவட்டத்தில் ஆவுடையார் கோவில், மணமேல் குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    7:30 (IST)

    கோவை மாவட்டத்தில் இராமநாதபுரம், துடியலூர், கவுண்டம்பாளையம்,  உக்கடம், ரேஸ்கோர்ஸ் உட்பட பல்வேறு  பகுதிகளில் லேசான  மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல்

    7:26 (IST)

    குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தால் இரண்டு நாள்க்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.