Home /News /tamil-nadu /

சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை மையம்

சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை மையம்

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிக அளவில் மூன்று இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.



    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    27ம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி கரூர் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பிற பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தொடர் மழை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மீனவர்கள் எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே 26,27 தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Red Alert, Weather News in Tamil

    அடுத்த செய்தி