Home /News /tamil-nadu /

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடற்கரைக்கு அப்பால் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் பரவலாக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 4 சென்டி மீட்டரும், அரியலூர் மாவட்டம் திருமானூர், ராமநாதபுரம், சிவகிரி, மணிமுத்தாறு , காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
Published by:Yuvaraj V
First published:

Tags: Rain, Weather Update

அடுத்த செய்தி