ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்

மழை

மழை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதிவரை மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Also Read : திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே புக் பண்ணீடுங்க!

    16.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    17.11.2022 மற்றும் 18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    19.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

    மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Chennai rains, Weather News in Tamil