Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 01.05.2022, 02.05.2022:  தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

    03.05.2022 முதல் 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை:

    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

    இதையும் படிங்க - வணிக வளாகத்தில் புகுந்து கண்ணில் பட்டவர்களை ஓட ஓட துரத்திய எருமை... 3 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறை

    சென்னையை பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்.   அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   

    தென்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 3, கூடலூர் பஜார் (நீலகிரி) 2, தேவலா (நீலகிரி) 1, தளி (கிருஷ்ணகிரி) 1.

    இதையும் படிங்க - மாற்றுத்திறனாளி சிறுமி, ஆறு மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - டெல்லியில் கொடூரம்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை : 

    05.05.2022: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Rain Update, Weather News in Tamil

    அடுத்த செய்தி