ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழைக்கு இன்று லீவு! 2 நாள் கழித்து சென்னையில் சூரியன் எட்டி பார்த்தது!

மழைக்கு இன்று லீவு! 2 நாள் கழித்து சென்னையில் சூரியன் எட்டி பார்த்தது!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் இன்று மழை ஓய்ந்த நிலையில் மஞ்சள் கதிர்களை மெல்ல பூமியில் படரவிட்டு சூரியன் கொஞ்சம் தென்படத்தொடங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மழை விட்டு தற்போது சூரியன் தென்பட தொடங்கியுள்ள நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

  தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. இதன் படி தமிழகத்தில் ஆங்காங்கே நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டன.

  இதையும் படிங்க: தொடரும் கனமழை - 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  ஊட்டி என்ன ஊட்டி இப்ப சென்னைக்கு வந்து பார் என்பது போன்ற வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் பறந்தன. சுட்டெரிக்கும் சூரியன் கடந்த நான்கு நாள்களாக தென்படாத நிலையில் சென்னையில் இன்று மழை ஓய்ந்த நிலையில் மஞ்சள் கதிர்களை மெல்ல பூமியில் படரவிட்டு சூரியன் கொஞ்சம் தென்படத்தொடங்கியுள்ளது. இதனால் சென்னை தனது பழைய சுறுப்சுறுப்புக்கு தயாராகி கொண்டுள்ளது.மேலும் வழக்க போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆர்வமாக செல்கின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, Rain Update, School Reopen