முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்..!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்..!

மாதிரி படம்

மாதிரி படம்

7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மழைக்காலம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில், பனிக்காலம் தற்போது வரை நீடித்து வருகிறது. எனினும், அவ்வப்போது மழையும் பெய்தும் வருகிறது. அந்த வகையில் சில நாட்களாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளத

First published:

Tags: Rain Update, Weather News in Tamil