ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இனிதான் மழையின் ஆட்டமே.. சென்னையை குறி வைத்த மழை.. வெதர்மேன் எச்சரிக்கை!

இனிதான் மழையின் ஆட்டமே.. சென்னையை குறி வைத்த மழை.. வெதர்மேன் எச்சரிக்கை!

வெதர்மேன்

வெதர்மேன்

இது வெறும் ட்ரைலர் தான் என்றும், இனிமேல் தான் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வங்கக்கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இன்றில் இருந்து 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரையை நோக்கி நகரும். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று வெளியிட்டு பேஸ்புக் பதிவில், இது வெறும் ட்ரைலர் தான் என்றும், இனிமேல் தான் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என கூறிய அவர், 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை கோரத்தாண்டவம் ஆடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னை ஹாட்ஸ்பாட் பகுதியாக மாறும் எனவும் எச்சரித்துள்ளார்.

  வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை:

  09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

  12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Weather News in Tamil