தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை!

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: June 12, 2019, 8:00 AM IST
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை!
மழை
Web Desk | news18
Updated: June 12, 2019, 8:00 AM IST
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக புத்தேரி, இறச்சகுளம், பார்வதிபுரம், ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எனவே அருவியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதே போல் தென்காசி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

உதகை மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமான இடங்கள் எனக் கண்டறியப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை காரணமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அனல் காற்று வீசும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see... இறந்து போன யானைக்குட்டியை தூக்கி சென்ற யானை

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...