• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு இடங்களில் மழை!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு இடங்களில் மழை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றனது. இதனால், இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், செம்பனார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மழை பெய்ததால், மக்கள் அவதியடைந்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டையிலும் கனமழை பெய்தது. அதனால், மீட்பு பணிகள் தாமதமாகின.

இதேபோல், நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சிவகங்கை சோழபுரம், நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதேபோல், திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மழை பரவலாக பெய்தது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் 2 -வது நாளாக மழை பெய்து. இதனால் பாதுகாப்பு கருதி, அவ்வப்போது, மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

இதனிடையே தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், மீண்டும் மழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: