அரசியல் காழ்புணர்ச்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வம்

காழ்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசெல்வமும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். சுமார் நான்கு மணி நேரம் நடைப்பெற்ற ஆலோசனக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்கள் கூட முடியாத சூழலில், காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்படுவதாகவும், அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாததால் இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அ.தி.மு.கவை அச்சுறுத்தி பார்ப்பதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார். தி.மு.க கொடுக்கும் எத்தகைய அச்சுறுத்தலையும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார். பின்தங்கிய மாவட்டமான விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் உயர்க்கல்வியில் மேன்மைபெற ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாகவும் ஆனால் ஜெயலலிதா பெயரில் உள்ள காரணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு அந்த பல்கலைக்கழகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்கலைக்கழகத்தை மாற்றும் முடிவுக்கு நிதி பற்றாக்குறை என காரணம் கூறப்படுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மதுரையில் நூலகம் அமைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என கேள்வி எழுப்பினார். மேலும் மதுரையில் நூலகம் அமைக்கும் அரசின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: