ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 5 நாட்கள் மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 5 நாட்கள் மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை மையம் தகவல்

மழை

மழை

weather update : அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 24.09.2022 முதல் 26.09.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 24.09.2022 முதல் 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

    27.09.2022 மற்றும் 28.09.2022தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    தென் தமிழககடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மேலும் விவரங்களுக்கு : mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் என வானிலை ஆய்வுமையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Heavy rain, Weather News in Tamil