முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென் மாவட்டங்களில் இந்த தேதியில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்..

தென் மாவட்டங்களில் இந்த தேதியில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்..

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Report : தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ’கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(05.03.2023) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நாளை (06.03.2023) மற்றும் நாளை மறுநாள் (07.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனைத்தொடர்ந்து, வரும் 8ம் தேதி மற்றும் 9ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புலம்பெயர் தொழிலாளர் பற்றிய அறிக்கை.. அண்ணாமலை மீது கலவரத்தை தூண்டுவதாக வழக்குப்பதிவு...!

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) ஏதுமில்லை.

மேலும் விவரங்களுக்கு:  mausam.imd.gov.in/chennai என்ற இணையதளத்தை காணலாம்.

First published:

Tags: Tamilnadu, Weather News in Tamil