கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி.... கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது

news18
Updated: August 17, 2019, 7:40 AM IST
கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி.... கனமழை பெய்ய வாய்ப்பு
மழை
news18
Updated: August 17, 2019, 7:40 AM IST
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்நிலையில், வடதமிழகத்தில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு மிதமான மழை பெய்தது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா நகர், போரூர் மட்டுமின்றி புறநகரான பூந்தமல்லி, மதுரவாயல், தாம்பரம் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது.


காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போன்று காட்சியளித்தன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரக் கூடும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று மாலையில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பலத்த மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.

கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கடலூர் நகரில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

Loading...

திருச்சியில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, விமான நிலையம், திருவெறும்பூர், மாத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளான வல்லம், ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சம்பா சாகுபடி பணிகள் தொடங்கும் வேளையில் மழை பெய்திருப்பது பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, விளாத்திகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இதனிடையே, தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Also watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...