தமிழகத்தில் தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

நெல்லை, தூத்துக்குடி, தேனி, கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: July 14, 2019, 11:47 AM IST
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 14, 2019, 11:47 AM IST
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தருமபுரியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. அதியமான்கோட்டை, இண்டூர், சோமன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாகவே மிதமான அளவுக்கு மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

இதேபோன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்தது. இதனால், இலவச தரிசனத்திற்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்த பக்தர்கள் மழையால் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனிடையே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Loading...
நெல்லை, தூத்துக்குடி, தேனி, கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Also Watch: ’குடிநீர் வேண்டுமா..’ ’குடும்பம் நடத்த வா’.. பெண்களுக்கு பாலியல் வலைவீசிய அரசு ஊழியர்கள்

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...