• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை விடுமுறை - ஆட்சியரின் உத்தரவை மதிக்காத தனியார் பள்ளி, கல்லூரிகள்

மழை விடுமுறை - ஆட்சியரின் உத்தரவை மதிக்காத தனியார் பள்ளி, கல்லூரிகள்

School leave

School leave

அரசின் உத்தரவை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் மழையிலும் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பள்ளிகளுக்கு வரவழைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதி தீவிர மழைப் பொழிவு இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

    சென்னை மட்டுமல்லாது ஈரோடு, சேலம் என பல மாவட்டங்களிலும் கடந்த ஒருவாரகாலமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி இருப்பதுடன், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வரும் மழையைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    Also read:  Exclusive: இருளில் மதுரை புதுமண்டபம்.. இந்து சமய அறநிலையத்துறைக்கு வியாபாரிகள் கண்ணீர் கேள்வி..

    இவை தவிர, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என கருதி மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தபோதிலும், அரசின் உத்தரவை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் மழையிலும் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பள்ளிகளுக்கு வரவழைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயக்கண்ணனும் இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Also read:   அதிவேகத்தில் வீசும் காற்று… சென்னை மக்களுக்கான அடுத்த அலெர்ட்!

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அநேக மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    ஆனால் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை எனவும், ஆசிரியர்களுக்கு வருகைப்பதிவு உண்டு எனவும் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களை கொட்டும் மழையிலும் நனைந்தபடி வந்து செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.

    ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவை துச்சமென எண்ணி அவமதிக்கும் இது போன்ற அவச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: