• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்துள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்துள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை மழை

சென்னை மழை

நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது எனவும், வெள்ளம் வடியும் வகையில் நீழ்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் இறப்பதாக வேதனை தெரிவித்தனர்.

  • Share this:
    நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்றம், மழை வெள்ளம், அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது.

    அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் பகுதியில் உள்ள ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

    நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது எனவும், வெள்ளம் வடியும் வகையில் நீழ்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் இறப்பதாக வேதனை தெரிவித்தனர்.

    இந்த மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக மீண்டும் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியதுடன், அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: வெள்ள பாதிப்பு: 2015ல் இருந்து என்ன செய்றீங்க... சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: