Rain updates live: சென்னையில் தொடரும் கனமழை... பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Rain updates live: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

  • News18 Tamil
  • | November 03, 2022, 21:46 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 23 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:44 (IST)

    சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    கனமழை காரணமாக
    நாளை  (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை
    மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
     அறிவிக்கப்பட்டுள்ளது. 

    21:27 (IST)

    கிழக்கு திசை காற்று நகரின் உட்பகுதியில் நகர்வதால் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு"
    கடல் பகுதியில் உருவான மழை மேகத்தால் இடியுடன் கூடிய கனமழை தொடரும்: வானிலை மையம்

    21:20 (IST)

    சென்னையில் இரவில் தொடரும் கனமழை

    சென்னையில் இன்று மாலை மழை பெய்து ஓய்ந்த நிலையில், இரவில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

    18:10 (IST)

    புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (4ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (5ம் தேதி) விடுமுறை...கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு...

    17:49 (IST)
    17:46 (IST)

    சென்னையில் மீண்டும் மிரட்டும் மழை... 
    சென்னையின் பல்வேறு  பகுதிகளில் மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

    10:36 (IST)

    நளினி உள்ளிட்ட 6பேர் விடுதலை வழக்கு - உச்சநீதிமன்றத்தில்  இன்றிரவு விசாரணை

    நளினி உள்ளிட்ட 6பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்  இன்றிரவு விசாரணைக்கு வரவுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இந்த 6 பேரும் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

    10:9 (IST)

    கொடைக்கானலில் நேற்று நள்ளிரவில் பெய்த‌ கனமழையால் ஆறுகளில் வெள்ளம்..

    திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் ப‌ரிதவிப்பு. ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ளும் ப‌ள்ளிக்கு செல்ல‌ ஆற்றைக்க‌ட‌க்க‌ முடியாம‌ல் த‌விப்பு.

    9:5 (IST)
    7:46 (IST)

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. ஊட்டி என்ன ஊட்டி இப்ப சென்னைக்கு வந்து பார் என்பது போன்ற வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் பறந்தன. சுட்டெரிக்கும் சூரியன் கடந்த நான்கு நாள்களாக தென்படாத நிலையில் சென்னையில் இன்று மழை ஓய்ந்த நிலையில் மஞ்சள் கதிர்களை மெல்ல பூமியில் படரவிட்டு சூரியன் கொஞ்சம் தென்படத்தொடங்கியுள்ளது.