வடமாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.
அடுத்த 3 நாட்களில் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.
திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக அல்லல்படுகின்றனர்.
மேலும் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களும் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
Weather News in Tamil : தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய் கிழமை கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் செவ்வாய் கிழமை மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.