Rain News Live: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

School Holiday: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • | November 01, 2022, 18:44 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:10 (IST)

    கோவையில் கனமழை

    தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

    18:38 (IST)

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

    கரூர் மாவட்டத்தில்  புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை, கோவகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை

    18:34 (IST)

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, முள்ளக்காடு, ஆத்தூர், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை 

    18:25 (IST)

    தமிழகத்தில் கடந்த (01/11/2022) 24 மணி நேரத்தில் மாலை 5.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு!


    17:26 (IST)

    அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 
     

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    16:30 (IST)

    அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக ஆலந்தூர்,அம்பத்தூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

    15:32 (IST)


    சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் பேருந்து சிக்கியது!

    வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் தொடர் மழை காரணமாக தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற சென்னை மாநகர பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்..


    15:13 (IST)

    சென்னை மக்களுக்கு ஆறுதல்... வானிலை அப்டேட் சொன்ன வெதர்மேன்!

    மழை நாளை முதல் மற்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்கிறது. இதனால் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்

    13:56 (IST)

    வடமாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

    அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

    அடுத்த 3 நாட்களில் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

    13:43 (IST)

    திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக அல்லல்படுகின்றனர்.

     மேலும் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களும் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

    Weather News in Tamil : தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய் கிழமை கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் செவ்வாய் கிழமை மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.