தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.மேலும் நீலகிரி, கோயம்புத்தூர்உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 15.06.2022 முதல் வரை 18.06.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
Also Read : போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் (பெரம்பலூர்) 11 செண்டிமீட்டர், மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்) தலா செ.மீ7, டேனிஷ்பேட்டை (சேலம்), தாளவாடி (ஈரோடு), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 6 செ.மீ, பென்னாகரம் (தருமபுரி), ஏற்காடு (சேலம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருச்சி AP (திருச்சி) தலா 5 செ.மீ, பாப்பாரப்பட்டி KVK (தருமபுரி), வீரகனூர் (சேலம்), பாடலூர் (பெரம்பலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) 4, அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 4 செ.மீ அளவு மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
15.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
16.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
17.06.2022: வடக்கு கேரளா - தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
18.06.2022:கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
19.06.2022: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.