முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்தடுத்து 2 நாட்களுக்கு தொடர் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலெர்ட்

அடுத்தடுத்து 2 நாட்களுக்கு தொடர் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலெர்ட்

மழை

மழை

weather update | கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

03.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

04.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.

05.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.

06.03.2023 மற்றும் 07.03.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, MET warning, Rain, Tamilnadu