• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் நிரம்பும் அணைகள்: ஓகேனக்கலுக்கு 25,000 கனஅடி நீர்வரத்து

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் நிரம்பும் அணைகள்: ஓகேனக்கலுக்கு 25,000 கனஅடி நீர்வரத்து

Youtube Video

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

  • Share this:
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97.5 அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டுப்பாளையம் காத்தையாற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பாலத்துக்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தான முறையில் பாலத்தை கடக்கின்றனர். காந்தவயல், ஆளூர், உளியூர், காந்தையார் பகுதி மக்கள் பாலத்தை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஆழியார் அணை, பரம்பிக்குளம், சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணை, முழு கொள்ளளவான 160 அடியை எட்டியதால், அணையில் இருந்து விநாடிக்கு 1,267 கனஅடி தண்ணீர், பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

     

    தொடர் மழையால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியில் இருந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவிக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவிப்பகுதி வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: