சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்கள்!

கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்தது.

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்கள்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 12, 2019, 11:50 AM IST
  • Share this:
2020 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு தொடங்கியது. ஜனவரி 10-ம் தேதிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைககளின் போது சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பது வழக்கம். இதனால், ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்கள் என்பதால், ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.


கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்தது.

ஜனவரி 11-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், ஜனவரி 12-ம் தேதிக்கான டிக்கெட்டை சனிக்கிழமையும் முன்பதிவு செய்யலாம்.

இதேபோல் ஜனவரி 13-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட்டுகளை ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு செய்துகொள்ளலாம்.ஜனவரி 14-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 17, 18 மற்றும் 19-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு முறையே செப்டம்பர் 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்