இந்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் (Rail land Development Authority) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டெண்ட் புராஜெக்ட் என்ஜினியர் Assistant Project Engineer (Civil) / Contract
காலிப்பணியிடங்கள் : 45
வயது வரம்பு: 23.12.2021 தேதியின் படி 21 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ. பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இதையும் படிங்க: ஐடிஐ முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை..
தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.10000 உதவித்தொகை வழங்கப்படும்.
=விண்ணப்பிக்கும் முறை: https://rlda.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து psecontract@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://rlda.indianrailways.gov.in/uploads/Vacancy_RLDA_Contract_02.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
இதையும் படிங்க: Job Alert | ரூ.1 லட்சம் சம்பளத்தில் NLC-யில் வேலை - விவரங்கள் இதோ..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.