ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் 1 டன் நாய் கறி பறிமுதல்? உணவுப் பிரியர்களே உஷார்!

சென்னையில் 1 டன் நாய் கறி பறிமுதல்? உணவுப் பிரியர்களே உஷார்!

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சி என்ற பெயரில் வந்த ஒரு டன் எடையுள்ள நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சி என்ற பெயரில் வந்த ஒரு டன் எடையுள்ள நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மாட்டு இறைச்சி வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை வீசியதாலும் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அந்தப் பெட்டியில் இருந்த இறைச்சியில் நாயின் வாலைப் போன்ற உறுப்பு இருந்ததால் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அதேநேரத்தில் அந்த இறைச்சியை கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மாதிரிகளை சோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமிருந்த இறைச்சியை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இறைச்சியை அனுப்பியவர்கள் யார் என்பதை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும், இந்த இறைச்சியை எந்த தனியார் உணவகத்திற்காக கொண்டுவரப்பட்டது என்கிற கோணத்தில் விசாரனை நடத்தவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிபோதைக்கு அடிமை... கொலைவெறியில் முடிந்தது - வீடியோ பார்க்க

First published:

Tags: Chennai egmore, Dog Meat