ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் மாற்றம்!

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் மாற்றம்!

சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் பழைய விலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியால், மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்தில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.10ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. அதில், சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிகமாக நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையான இது பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், தேவையில்லாமல் மக்கள் நடைமேடைகளில் கூடுவதை ரயில்வே ஊக்கப்படுத்துவதில்லை. பொதுமக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து சென்னை ரயில்வே கோட்டத்தில் உயர்த்தப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருந்த பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் ரூ.10 ஆக குறைத்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

First published: