• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிவாரணப் பொருட்களை ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்ல ரயில்வே அனுமதி

நிவாரணப் பொருட்களை ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்ல ரயில்வே அனுமதி

இந்திய இரயில்வே

இந்திய இரயில்வே

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொருட்களை அனுப்பும்போது, சரக்கு கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதிவரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்து வருகின்றனர். ரயில்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், தற்போதைய நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொருட்களை அனுப்பும்போது சரக்கு கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து அரசு அமைப்புகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம்.

மற்ற அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர்கள் முடிவுசெய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சரக்குகளை அனுப்புவோரும் பெறுவோரும் மாவட்ட ஆட்சியர் அல்லது உள்ளாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை நோக்கி செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது குறித்து கோட்ட மேலாளர்கள் முடிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களில் உள்ள வழக்கமான சரக்குப் பெட்டிகளுக்குப் பதிலாக, தனி பெட்டிகளில் அனுப்புவது சிறந்தது என்று ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு, வரும் 10-ம் தேதிவரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Also see... மகள் திருமணம்: ராமேஸ்வரத்தில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: