Home /News /tamil-nadu /

மெட்ரோவைப் போல புறநகர் ரயில்களில் ஏசி வசதி - ரயில்வே அமைச்சர்

மெட்ரோவைப் போல புறநகர் ரயில்களில் ஏசி வசதி - ரயில்வே அமைச்சர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

மெட்ரோ ரயில்களைப் போல புறநகர் ரயில்களிலும் விரைவில் ஏசி வசதி செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர். இதனை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு திட்டத்தை வடிவமைத்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    அதன்பின்னர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தென்னக ரயில்வேயில் அதிக யானைகள் விபத்துக்குள்ளாகின்றன. யானைகள் ஒருமுறை கடந்த பாதையை நீண்ட நாட்கள் ஞாபகம் வைத்து அதே பாதையை பயன்படுகின்றன.

    யானைகள் தண்டவாளங்களைக் கடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரயில் நிலையங்கள் 760 கோடி செலவில் புணரமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமாக 5 ரயில் நிலையங்கள் முழுவதுமாக புணரமைக்கப்பட உள்ளன. 3,861 கோடி ரூபாய் தமிழக ரயில்வேவுக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.

    பள்ளி வகுப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்

    சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஹைப்பர் லூப் திட்டத்திற்கு 8.5 கோடி ரூபாய் மத்திய ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளன. வனவிலங்குகள் பாதிக்காத வண்ணம் பாதை அமைக்கப்பட உள்ளன. புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் பயன்படுத்துவது சாத்தியமானதுதான்.

    வரும் காலங்களில் ரயில் கட்டணங்கள் உயர்த்துவதற்கு வாய்ப்பில்லை. பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உள்ளது. சீனியர் சிட்டிசனுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்ட முதியோர் கட்டண சலுகை தற்போது நீடிக்க வாய்ப்பு இல்லை. விரைவில் புறநகர் ரயில் மெட்ரோ போல ஏசி வசதி செய்யும் பணிகள் துவங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai local Train

    அடுத்த செய்தி