• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலம், கோவையில் இருந்து இன்று முதல் 3 ரயில்கள் இயக்கம்!

சேலம், கோவையில் இருந்து இன்று முதல் 3 ரயில்கள் இயக்கம்!

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சேலம், கோவையில் இருந்து இன்று முதல் இயக்கப்படும் 3 பயணிகள் ரயில் சேவையை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    சேலத்தில் இருந்து கரூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கூட்டம் அதிகரித்துள்ளதால், இன்று முதல் நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

    அதேபோல், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பழனிக்கும் புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. கரூரிலிருந்து முற்பகல் 11.40க்கு புறப்படும் ரயில், நாமக்கல், ராசிபுரம், வழியாக சென்று பிற்பகல் 1.25 மணியளவில் சேலத்தை சேரும்.

    பிறகு சேலத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.25 மணியளவில் கரூரை சென்றடைகிறது. கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், பொள்ளாச்சியை காலை 7.05 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு காலை 8.45 மணிக்கு வந்தடையும்.

    இந்த 2 ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்பட உள்ளன. அதேபோல், பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு கோவையை அடையும்.

    இதனிடையே, பிற்பகல் 1.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், மாலை 4.40 மணிக்கு பழனிக்கு வந்தடையும்.

    இந்த ரயில் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த மூன்று ரயில்களையும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லியில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: