• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலியான இன்டர்வியூ கடிதம்... ரூ.12 லட்சம் மோசடி: ரயில்வே ஊழியர் கைது

போலியான இன்டர்வியூ கடிதம்... ரூ.12 லட்சம் மோசடி: ரயில்வே ஊழியர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வேலைக்காக வந்த இன்டர்வியூ கடிதத்தை எடுத்துக் கொண்டு ரயில்வே அலுவலகத்திற்கு சென்ற போது, அது போலியான கடிதம் என தெரியவந்துள்ளது.

  • Share this:
    சென்னை அம்பத்தூரில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுரேஷ் என்பவரிடம் 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், அம்பத்தூர் பானு நகரை சேர்ந்த ரயில்வே ஊழியர் வெங்கிடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளுர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ்குமார். 36 வயதான இவர் அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்கெண்ட நடவடிக்கையில் வெங்கிடேசன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை சென்ட்ரலில் உள்ள சீனியர் டிவிசினல் ஆப்பரேஷ்னல் மேனேஜர்க்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். 2 முறை 6 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக போலியான ரயில்வே இன்டர்வியூ கடிதத்தையும் தபால் மூலம் அனுப்பியுள்ளார் வெங்கடேசன்.

    இதனத் தொடர்ந்து, தனக்கு வேலைக்காக வந்த இன்டர்வியூ கடிதத்தை எடுத்துக் கொண்டு ரயில்வே அலுவலகத்திற்கு சென்ற போதுதான் அது போலியான கடிதம் என தெரியவந்தது. இதன், அடிப்படையில் சுரேஷ் அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Must Read : கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    இதில் வேறு யாரையாவது இதே போல் ஏமாற்றி இருக்கிறார் எனற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: