சென்னை மின்சாரவாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ரெய்டு!
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம் முத்து லஞ்சம் பெற்றதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது
- News18
- Last Updated: January 3, 2019, 9:23 AM IST
சென்னையில் தெற்கு மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரு லட்சத்து 15,000 ரொக்கமும், 18 கிராம் தங்க நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அண்ணா சாலையில் உள்ள இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரகுரு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
புத்தாண்டின்போது தலைமைப் பொறியாளர் முத்து தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் பரிசுப் பொருட்களும், லஞ்சமாக பணமும் பெற்றதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. நள்ளிரவு தாண்டி நீடித்த இந்த சோதனை 2 மணிக்கு நிறைவடைந்தது. சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக தலைமைப் பொறியாளர் முத்துவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சென்னை தெற்கு மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் முத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 15,000 ரொக்கமும் 18 கிராம் எடை கொண்ட 3 தங்க நாணயம் ஆகியவை பறிமுதல் செய்யபட்டன.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம் முத்து லஞ்சம் பெற்றதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.Also see... இன்றைய ராசிபலன் | 03 ஜனவரி 2019
அண்ணா சாலையில் உள்ள இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரகுரு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
புத்தாண்டின்போது தலைமைப் பொறியாளர் முத்து தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் பரிசுப் பொருட்களும், லஞ்சமாக பணமும் பெற்றதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது.