Home /News /tamil-nadu /

மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை: ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை: ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

உங்களில் ஒருவன் சுயசரிதை வெளியீடு

உங்களில் ஒருவன் சுயசரிதை வெளியீடு

MK Stalin Book Realease: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. 

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான உங்களின் ஒருவன் (பாகம்-1) புத்தக வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடவுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய ‘உங்களில் ஒருவன்’  (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார்.  இதில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளியிடுகிறது.

    சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு உங்களில் ஒருவன் புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசுகிறார்.

    இதையும் படிங்க: Exclusive: மெட்ரோ ரயிலின் 6 ஆண்டுகால இழப்பை ஏற்றுள்ள தமிழக அரசு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்


    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடவுள்ளார். கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். விழாவின் நிறைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்ற உள்ளார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kerala CM Pinarayi Vijayan, MK Stalin, Rahul gandhi

    அடுத்த செய்தி