சட்டபேரவையில் இன்றைய தினம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய சட்டமன்ற
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் என குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசும்போது, அவர் வாரம்தோறும் சைக்கிள் ஒட்டுவதாக, தான் கூறியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக முதலமைச்சரிடம் பேசிய ராகுல்காந்தி, அடுத்த முறை வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஒட்ட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைத்துள்ளதாகக் கூறினார்.
Also Read : மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் ரூ. 25,000 வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டுத்தொடர் 110விதியின் கீழ் விளையாட்டு துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். வடசென்னையில் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும், ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளும் 3 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்களை ஊக்குவிக்க 4 ஒலிம்பிக் அகாடமிக் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பல அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.